Pattamboochi

பிரபல OTT-யில் 5 மொழிகளில் வெளியாகும் 'விக்ரம்' திரைப்படம்.. எப்போ ரிலிஸ்? சூப்பர் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

Kamal Haasan Vikram Movie OTT Release Date Announced

Also Read | தாய்லாந்து நாட்டில் ஹனிமூன்.. நயன்தாரா - விக்னேஷ் சிவன் வெளியிட்ட LATEST டூர் PHOTOS!

‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோரை வைத்து விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

நடிகர் சூர்யா ரோலக்ஸ் எனும் பெயரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராமன் கமலின் மகனாக 'பிரபஞ்சன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி நடித்துள்ளனர்.

விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்து வருகிறது.

Kamal Haasan Vikram Movie OTT Release Date Announced

விக்ரம் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் & நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 'லெக்ஸஸ்' ரக காரை பரிசாக அளித்துள்ளார்.

இந்நிலையில் விக்ரம் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளின் OTT ஒளிபரப்பு செய்யும் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Kamal Haasan Vikram Movie OTT Release Date Announced

அதன்படி வரும் ஜூலை மாதம் 8 ஆம் தேதியன்று விக்ரம் படம் 5 மொழிகளிலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

விக்ரம் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யும் சேட்டிலைட் உரிமத்தை  ஸ்டார்  நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Kamal Haasan Vikram Movie OTT Release Date Announced

தமிழ் மொழியில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியும், மலையாள மொழியில் ஏசியா நெட் சேனலும், இந்தியில் ஸ்டார் கோல்ட் சேனலும், கன்னட மொழியில் ஸ்டார் சுவர்ணா சேனலும், தெலுங்கு மொழியில் ஸ்டார் மா சேனலும் கைப்பற்றி உள்ளனர்.

Also Read | 'வாரிசு' படத்தின் தாறுமாறான மூன்றாவது லுக் போஸ்டர்.. விஜய் சும்மா தெறியா இருக்காரு!

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Vikram Movie OTT Release Date Announced

People looking for online information on Kamal Haasan, Vikram Movie, Vikram Movie OTT Release will find this news story useful.