Veetla Vishesham Others Page USA

PRINCE படத்துக்கு ஒரு ஹிட் சாங் போடுங்க.. சிவகார்த்திகேயன் - இசையமைப்பாளர் தமன் சந்திப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் அனுதீப் கேவியின் தெலுங்கு-தமிழ் இருமொழி திரைப்படத்திற்கு பிரின்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

SK Thaman Prince Movie Music Composing Session

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகியவற்றின் கீழ் நாராயண் தாஸ் நரங், சுனில் நரங், புஸ்கூர் ராம் மோகன் ராவ் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். சோனாலி நரங் படத்தை வழங்குகிறார். எஸ் தமன் இசையமைக்க, அருண் விஸ்வா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

சில நாட்களுக்கு முன் படத்தின் டைட்டிலை அறிவித்ததோடு, முதல் & இரண்டாவது லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த படத்தில் நடிகை மரியா, இங்கிலாந்து நாட்டுப் பெண்ணாக நடிக்கிறார்.  மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாகவும், மூத்த நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

SK Thaman Prince Movie Music Composing Session

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. பிரின்ஸ் படத்தை விநாயகர் சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் சமீபத்தில் அறிவித்தனர். படத்தின் கதை இந்தியாவின் பாண்டிச்சேரி மற்றும் இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரின் பின்னணியில் நடப்பதாக அமைந்துள்ளது.

SK Thaman Prince Movie Music Composing Session

இந்நிலையில் இப்படத்தின் பாடல் பதிவு செசனில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. தமனின் இசை ஸ்டூடியோவில் சிவகார்த்திகேயன் & அனுதீப் பாடல் பதிவில் பங்கேற்றுள்ளது போல புகைப்படம் அமைந்துள்ளது. 

தொடர்புடைய இணைப்புகள்

SK Thaman Prince Movie Music Composing Session

People looking for online information on Sivakarthikeyan, SK will find this news story useful.