Nenjuku Needhi

THALAPATHY66 நடிகர்களுடன் விஜய் எடுத்துக்கிட்ட சூப்பர் PHOTO.. கூட யாரெல்லாம் இருக்காங்கனு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐத்ராபாத்: விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Thalapathy66 Vijay Movie BTS Image goes Viral on social media

Also Read | நடிகை சம்யுக்தா மேனன் வெளியிட்ட 'வாத்தி' படத்தின் வேறமாரி ஷூட்டிங் ஸ்பாட் BTS போட்டோ!

தளபதி 66 படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில் முழு வீச்சில் நடந்து வருகிறது.

நேற்று 23.05.2022 அன்று படத்தில் விஜய் - பிரகாஷ் ராஜ் - சரத்குமார்  & ஸ்ரீ காந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படப்பிடிப்பு குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Thalapathy66 Vijay Movie BTS Image goes Viral on social media

மேலும் இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது என்றும், படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் கலந்து கொண்டனர். இந்த பூஜையில் நடிகர் சரத்குமாரும் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தில் விஜய் உடன் முதல்முறையாக இணைந்து சரத்குமார் நடிக்க உள்ளார். இவர்கள் போக நடிகர் பிரபு, ஷ்யாம், ஜெய சுதா, பிரகாஷ் ராஜ், யோகிபாபு , நடிகை சங்கீதா, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடிக்கின்றனர். இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Thalapathy66 Vijay Movie BTS Image goes Viral on social media

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் முன்னணி நடிகர்கள் விஜய் உடன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் சரத்குமார், ஸ்ரீ காந்த், பிரகாஷ் ராஜ் உள்ளனர்.

Thalapathy66 Vijay Movie BTS Image goes Viral on social media

இந்த படத்தில் எடிட்டராக பிரவீன் கே எல் இணைந்துள்ளார். விஜய்யின் பைரவா படத்தின் எடிட்டரும் இவர் தான். வமசியின் சில படங்களில் எடிட்டராகவும் பணியாற்றி உள்ளார். இப்படத்திற்கு வம்ஷி பைடிப்பள்ளியுடன் இணைந்து கதை, திரைக்கதையை ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன் எழுதியுள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய உள்ளார்

Also Read | வசந்த பாலன் இயக்க அர்ஜூன் தாஸ் - துஷாரா விஜயன் நடிக்கும் புதிய படம்! போஸ்டருடன் வெளியான UPDATE

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy66 Vijay Movie BTS Image goes Viral on social media

People looking for online information on Thalapathy, Thalapathy66, Thalapathy66 Vijay Movie will find this news story useful.