Nenjuku Needhi

"Thalapathy67 இப்டி தான் இருக்கும்.." Behindwoods Gold Medals 2022 விருது மேடையில் லோகேஷ் கனகராஜ் சொன்ன செம 'தகவல்'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

8 ஆவது Behindwoods Gold Medals Award மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் வைத்து நடைபெறவுள்ளது.

Lokesh kanagaraj about thalapathy67 in bgm awards 2022

இதன் முதல் நாளான இன்று, நடிகர்கள் மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், நடிகை சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, தர்ஷா குப்தா, இயக்குனர்கள் வெங்கட் பிரபு, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், பாடகர்கள் அந்தோணி தாசன், ஜோனிதா காந்தி, கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

முதல் நாள் முழுவதும் நடனம், ஜாலியான தருணங்கள், விருது வழங்கும் நிகழ்வுகள் என நிறைய சுவாரஸ்ய சம்பவங்கள் நிறைந்திருந்தது. மேலும், லிஜோமோள் ஜோஸ், மணிகண்டன், ஆண்ட்ரியா, ஜோனிதா காந்தி, டான்ஸ் மாஸ்டர் ஜானி, யோகி பாபு, ஞானவேல், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டிருந்தது.

Thalapathy 67 பற்றி பேசிய லோகேஷ்..

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விருது வாங்கும் போது, விஜய்யின் அடுத்த திரைப்படம் குறித்து அவர் தெரிவித்த தகவல் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கார்த்தியை வைத்து 'கைதி' என்னும் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

Lokesh kanagaraj about thalapathy67 in bgm awards 2022

இதற்கு அடுத்தபடியாக, விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கி இருந்த 'மாஸ்டர்' திரைப்படம், பெரிய அளவில் ஹிட்டடித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோரை வைத்து விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

"இன்னும் கொஞ்சம் நாளுல.."

விக்ரம் படத்திற்கு பிறகு, நடிகர் விஜய்யை வைத்து மீண்டும் ஒரு படத்தை லோகேஷ் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. இதனிடையே, Thalapathy67 குறித்து Behindwoods கோல்டு மெடல்ஸ் விருதுகள் மேடையில் பேசிய லோகேஷ் கனகராஜ், "இன்னும் கொஞ்ச நாளில் அதிகாரப்பூர்வ அப்டேட் வந்து விடும்" என கூறினார்.

 

தொடர்ந்து, படம் கிளாஸா மாஸா என தொகுப்பாளர் தீனா கேட்க, "ரெண்டும் கலந்தது" என லோகேஷ் கனகராஜ் தனது பதிலில் குறிப்பிட்டார். இதனால் விஜய் படத்தை லோகேஷ் இயக்குவது உறுதியாகி உள்ளதால், ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். Thalapathy 67 குறித்து லோகேஷ் பேசிய வீடியோக்களும், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh kanagaraj about thalapathy67 in bgm awards 2022

People looking for online information on Lokesh Kanagaraj, Thalapathy 67, Vijay, Vikram will find this news story useful.