Nenjuku Needhi

விஜய் ஆண்டனி - ரித்திகா படத்தில்.. பிரபல பின்னணி பாடகியின் மெலோடி பாடல்?.. வெளியான 'செம' தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது திரை பயணத்தை இசையமைப்பாளராக ஆரம்பித்த விஜய் ஆண்டனி, 'நான்' என்னும் திரைப்படம் மூலம் நாயகனாகவும் அறிமுகமாகி இருந்தார்.

Shreya goshal sing a melody song in vijay antony movie sources

இதனைத் தொடர்ந்து, சலீம், பிச்சைக்காரன், சைத்தான், காளி, கோடியில் ஒருவன் உள்ளிட்ட ஏராளாமான திரைப்படங்களிலும் நாயகனாக விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.

இதற்கு மத்தியில், அண்ணாதுரை, திமிரு பிடிச்சவன் உள்ளிட்ட திரைப்படங்களின் எடிட்டர் ஆகவும் விஜய் ஆண்டனி பணிபுரிந்து வந்தார்.

'கொலை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

தொடர்ந்து, பிச்சைக்காரன் 2, கொலை, அக்னி சிறகுகள் உள்ளிட்ட ஏராளமான படங்களிலும் விஜய் ஆண்டனி அடுத்தடுத்து நடித்து வருகிறார். இதில், பிச்சைக்காரன் 2 படத்தை அவரே இயக்கி நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும், 'கொலை' என்னும் திரைப்படத்தை பாலாஜி குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், சமீபத்தில்.வெளியிடப்பட்டிருந்தது.

முதல் சிங்கிள் குறித்த அப்டேட்

விஜய் ஆண்டனியுடன் இந்த படத்தில், ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், முரளி ஷர்மா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். மேலும், மெரினா, மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த கிரிஷ் கோபாலகிருஷ்ணன், கொலை படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் பாடல் குறித்து, அசத்தலான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

பிரபல பின்னணி பாடகி, ஷ்ரேயா கோஷலின் குரலில் மெலடி பாடல்  ஒன்றை, கொலை படத்திற்காக கிரிஷ் கோபாலகிருஷ்ணன் உருவாக்கி உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் ரெக்கார்டிங் ஏற்கனவே முடிந்து விட்டதாக கூறப்படும் நிலையில், இந்த முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்த, அதிகார்பூர்வ அறிவிப்பினை 'கொலை' படக்குழு விரைவில் வெளியிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Shreya goshal sing a melody song in vijay antony movie sources

People looking for online information on First Single, Girish Gopalakrishnan, Kolai Movie, Melody Song, Radhika Sarathkumar, Ritika singh, Shreya Ghoshal, Vijay Antony will find this news story useful.