Nenjuku Needhi

Thalapathy66 : Vijay-யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த பிரகாஷ் ராஜ்.. தளபதி லுக் சும்மா அள்ளுதே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக 'பீஸ்ட்' திரைப்படம், கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி அன்று வெளியாகி இருந்தது.

Prakash raj shares pic with vijay from thalapathy66 spot

நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில், நடிகர் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், VTV கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

அதே போல, அனிருத் இசையமைப்பில் உருவாகி வந்த பாடல்களும் பெரிய அளவில் ஹிட்டாகி இருந்தது.

தளபதி 66..

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து, தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில், தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இந்த படத்தினை தயாரித்து வருகின்றனர். தமன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில், நடிகர் விஜய்யுடன் முதல் முறையாக நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பூஜையும், சமீபத்தில் சென்னையில் வைத்து நடைபெற்றிருந்தது. இதில், விஜய், ராஷ்மிகா, வம்சி, தில் ராஜு  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, Thalapathy 66 படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் வைத்து தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

பிரகாஷ் ராஜ் பகிர்ந்த புகைப்படம்

அது மட்டுமில்லாமல், Thalapathy 66-இல் விஜய்யுடன் நடிக்கவுள்ள பிற நடிகர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகி இருந்தது. இதில், சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷியாம், யோகி பாபு, சங்கீதா உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், விஜய்யுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பிரகாஷ் ராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

"Hai Chellam sssss. We are back #thalapathy66." என கேப்ஷனில் பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை நிறத் தாடியுடன் சற்று மாறுபட்ட லுக்கில் இருக்கும் விஜய்யின் புகைப்படம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Prakash raj shares pic with vijay from thalapathy66 spot

People looking for online information on Dil Raju, Prakash Raj, Rashmika Mandanna, Thalapathy 66, Vamsi Paidipally, Vijay will find this news story useful.