மத்திய அரசு அறிவித்த 21 ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு மக்கள் வீட்டுக்குள் முடங்கும் நிலை உள்ளது. அத்தியாவசிய தேவை தவிர மற்ற விஷயங்களுக்காக மக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து மளிகை,பால், மருத்துவமனைகள் உள்ளிட்ட சில விஷயங்கள் தவிர மற்றவை யாவும் இயங்காது. சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ''பிராப்ளம்ஸ் வில் கம் அண்ட் கோ, கொஞ்சம் சில் பண்ணு மாப்பி. வெளியில் சுற்ற முடியாத போது நாங்கள் என்ன பண்ணுவோம் ? மாஸ்டர் டீம் சோஷியல் டிஸ்டன்ஸிங்கில் இருக்கிறோம் நீங்கள் ?'' என்று தளபதி விஜய், அனிருத், தயாரிப்பாளர் ஜெகதீஷ் ஆகியோருடன் வீடியோ கால் பேசும் ஃபோட்டோ கொலாஜை அவர் வெளியிட்டுள்ளார்.
Problems will come and go..konjam chill panu maapi! ☺️ How we hang out when we can’t really hang out 😋
Team ‘Master’ is social-distancing. Are you? @actorvijay @anirudhofficial @Jagadishbliss pic.twitter.com/OiUelLDUi1
— malavika mohanan (@MalavikaM_) March 26, 2020