''இத்தாலியில் மாட்டிக்கிட்டேன், என் மூலம் கொரோனா பரவக்கூடாது'' - பிரபல பாடகர் பகிர்ந்த வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா பிரச்சனை உலக அளவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இத்தாலி, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மிக மோசமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இத்தாலியில் கொரோனா குறித்து பிரபல பாடகர் ஸ்வேதா பண்டிட் வீடியோ | Popular Singer Shweta Pandit shares a Video about Corona Virus in Italy

இந்நிலையில் தமிழில் முன்னணி பாடகியாக விளங்குபவர் ஸ்வேதா பண்டிட். இவர் தமிழில் பில்லா 2, டேவிட், பியார் பிரேமா காதல் உள்ளிட்ட பல படங்களில் இவரது பாடல் மிகவும் பிரபலம். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் நான் தற்போது இத்தாலியில் இருக்கிறேன். இந்த நாடு கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளது. நான் என் சொந்த வீட்டில் வைத்து பூட்டி வைக்கப்பட்டுள்ளேன்.

இது சாதராண காய்ச்சலா அல்லது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோமோ என்று நம்மால் கணிக்கமுடியாது. தாமதமானால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் அளிக்கப்படும். அந்த மனிதர் சில நாட்களில் மரணிப்பார். இது ஒன்றும் ஜோக் இல்லை. மிகவும் ஆபத்தானது. இது விடுமுறை அல்ல. உலக அளவில் 8,000க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ள செய்திகளை நீங்கள் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். நான் தற்போது கடவுள் கருணையால் ஆரோக்கியமாக இருக்கிறேன்.

இந்தியாவில் சற்று தாமதாமாக பரவியதால் அது சற்று அதிர்ஷ்டவசமானது. இத்தாலியில் நடந்தது போல் இந்தியாவிலும் நடக்கக்கூடாது. என்னால் ஹோலி பண்டிகையின் போது இந்தியா வந்திருக்க முடியும் ஆனால் நான் வரவில்லை. என் மூலம் அந்த வைரஸ் யாருக்கும் பரவக்கூடாது என்பதற்காக நான் வரவில்லை. நீங்கள் எல்லோரும் அந்த வைரஸை எதிர்கொண்டு அதனை தோற்கடிக்க வேண்டும் என்பது விருப்பம். என்று தெரிவித்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#staysafe #stayhome #prayforitaly #italylockdown #indialockdown #jantacurfew

A post shared by SP ✨ (@shwetapandit7) on

Entertainment sub editor