''பட்ஜெட் எவ்ளோ? ரிலீசுக்கு முன் கலெக்‌ஷன் எவ்ளோ?'' - 'பிகில்' தயாரிப்பாளர் பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்து தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகவிருக்கிற படம் 'பிகில்'. அட்லி இந்த படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Thalapathy Vijay's Bigil Producer Archana Kalpathi about the Budget

ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'தெறி', 'மெர்சல்' படங்களுக்கு பிறகு அட்லி - தளபதி விஜய் இணைந்துள்ள இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் பிகில் படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், கிட்டத்தட்ட intrest சேர்க்காமல் 180 கோடி ரூபாய் ஆனதாக குறிப்பிட்டார். மேலும், இந்த படத்தின் Pre release Collection எவ்வளவு என்ற மற்றொரு ரசிகரின் கேள்விக்கு ஏறத்தாழ ரூ. 200 கோடி வரை கிடைத்ததாக தெரிவித்தார்.