''செஞ்சுட்டா போச்சு...'' - சென்னையில் விற்பனை செய்யப்படும் 'பிகில்' ராயப்பன் உடை
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 22, 2019 01:44 PM
தளபதி விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், ஆனந்த்ராஜ், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த டிரெய்லரில் குறிப்பாக ராயப்பன் வேடத்தில் வரும் விஜய்யின் தோற்றம்,அவரது உடை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது அவரது உடையான கருப்பு சட்டை, காவி நிற வேட்டி, சிலுவையுடன் கூடிய செயின் தற்போது சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.
Tags : Bigil, Thalapathy, Vijay, Nayanthara