"ஆக்சன்" விஷாலுக்காக ஹிப்ஹாப் தமிழாவின் ரொமான்டிக் பாடல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

"வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தைத்தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.C அவர்கள் இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஆக்‌ஷன்”. இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார்.

Vishal, Tamannahs action Film Nee Sirichalum Fist Single

மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.C மற்றும் நடிகர் விஷால் இணையும் மூன்றாவது படம் இந்த “ஆக்‌ஷன்” திரைப்படம்.

கத்தி சண்டை படத்திற்கு பிறகு விஷாலுடன் மீண்டும் இந்த படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை தமன்னா. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பில் பாடல்கள் உருவாகியுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆக்‌ஷன் படம் நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் முதல் பாடலான 'நீ சிரிச்சாலும்' பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

"ஆக்சன்" விஷாலுக்காக ஹிப்ஹாப் தமிழாவின் ரொமான்டிக் பாடல்! வீடியோ