'முகவரி' பட இயக்குநருடன் இணையும் விஜய் சேதுபதி - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 17, 2019 12:42 PM
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகவிருக்கிற படம் 'சங்கத்தமிழன்'. விஜயா புரொடக்ஷன் சார்பில் பி.பாரதி ரெட்டி இந்த படத்தை தயாரித்துள்ளார்.

விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை விஜய் சந்தர் இயக்கியுள்ளார்.
இதனையடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி முகவரி, தொட்டி ஜெயா உள்ளே படங்களின் இயக்குநர் வி.இசட்.துரை இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.
வி.இசட்.துரை தற்போது இயக்குநர் சுந்தர்.சி முதன்மை வேடத்தில் நடித்துள்ள 'இருட்டு' படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.