Bigil Breaking - தளபதி விஜய்யின் ‘பிகில்’ படத்தில் இணைந்த முன்னாள் Indian Football Captain
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 11, 2019 11:56 AM
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ‘பிகில்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில், பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் நடிக்கவிருக்கிறார்.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், கேரளாவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியுமான ஐ.எம்.விஜயன், விஜய் நடித்து வரும் ‘பிகில்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் இந்திய கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானாகிய ஐ.எம் விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கும் இப்படத்தில் அப்பா விஜய்யான மைக்கேல் ராயப்பனுடன், ஐ.எம்.விஜயன் பயணிப்பதாக கூறப்படுகிறது.
இவர், இந்திய அணிக்காக 1989-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை 79 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 40 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே தமிழ் சினிமாவில் ‘திமிரு’, ‘கொம்பன்’, ‘கெத்து’ உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்.