சிங்கப் பெண்களுடன் நேசமணி வடிவேலு ஸ்டைலில் டப்மாஷ் செய்யும் அட்லி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 30, 2019 07:29 PM
'தெறி', 'மெர்சல்' படங்களுக்கு பிறகு அட்லி - தளபதி விஜய் இணைந்துள்ள படம் 'பிகில்'. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி வெளியானது.

பெண்கள் ஃபுட்பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்னர். இந்நிலையில் பிரெண்ட்ஸ் படத்தில் நேசமணி வடிவேலு ஸ்டைலில் இயக்குநர் அட்லி சிங்கப் பெண்களுடன் டப் மேஸ் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சிங்கப் பெண்களுடன் நேசமணி வடிவேலு ஸ்டைலில் டப்மாஷ் செய்யும் அட்லி வீடியோ