‘புள்ளிங்கோ இருக்காங்கவேற இன்னா வோணும்..?’ - முதன்முறையாக இந்த நாட்டில் ரிலீசாகும் பிகில்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 29, 2019 03:32 PM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்து தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகியிருக்கும் படம் 'பிகில்'. அட்லி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
![Vijay Bigil will be released on the 30th of October in Egypt Vijay Bigil will be released on the 30th of October in Egypt](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/vijay-bigil-will-be-released-on-the-30th-of-october-in-egypt-photos-pictures-stills.png)
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
முதன்முறையாக ‘பிகில்’ திரைப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ள இப்படத்தை தளபதி ரசிகர்கள் ஆங்காங்கே பட்டாசு வெடித்து ‘பிகில்’ அடித்து தீபாவளி கொண்டாட்டத்தை பிகில் திரைப்படத்துடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இப்படம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி எகிப்து நாட்டில் வெளியாக உள்ளது மேலும் எகிப்தில் வெளியாகும் முதல் தமிழ் படம் பிகில் என்பது குறிப்பிடத்தக்கது.
#Bigil Creates HISTORY! 🔥#ThalapathyVijay's #Bigil becomes the first Tamil film to release in Egypt, releasing on 30th October.@Ags_production @actorvijay #Nayanthara @Atlee_dir @arrahman @archanakalpathi #BlockbusterBigil #BigilDiwali pic.twitter.com/oEu5n3WgDg
— AP International (@APIfilms) October 29, 2019