தெறி பேபி..! - ‘தெறி’ தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயின் இவரா?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 30, 2019 01:01 PM
தளபதி விஜய் மற்றும் அட்லி காம்போவில் வெளியான பிளாக் பஸ்டர் திரைப்படமான ‘தெறி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் முன்னணி ஹீரோயின் இணைந்துள்ளார்.
![Shruti Haasan on board for Thalapathy Vijay's Theri Telugu remake Shruti Haasan on board for Thalapathy Vijay's Theri Telugu remake](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/shruti-haasan-on-board-for-thalapathy-vijays-theri-telugu-remake-news-1.jpg)
கடந்த 2016ம் ஆண்டு வெளியான ‘தெறி’ திரைப்படத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா, இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவான இப்படத்தை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில், கோபிசந்த் இயக்கத்தில் ‘தெறி’ படத்தின் தெலுங்கு ரீமேக் உருவாகவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. ரவி தேஜா ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு ‘RT66’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது, இப்படத்தின் ஹீரோயினாக நடிகை ஸ்ருதிஹாசன் இணைந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘பலுபு’ என்ற படத்திற்கு பிறகு நடிகை ஸ்ருதிஹாசன் மீண்டும் ரவி தேஜாவுடன் இணைந்து நடிக்கிறார். நடிகர் விஜய்யின் ‘தெறி’ திரைப்படம் ஏற்கனவே ‘போலீஸோடு’ என்ற தலைப்பில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசானது குறிப்பிடத்தக்கது.
Welcoming ..the multi talented actress @shrutihaasan on board 😊👍👍 #RT66 pic.twitter.com/Coym47HUDF
— Gopichand Malineni (@megopichand) October 30, 2019