‘பல்லு படாம பாத்துக்க’ என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தின் மூலம் டெம்பிள் மங்கீஸ் யூடியூப் பக்கத்தின் பிரபலம் விஜய் வரதராஜன் இயக்குநராக அறிமுகமாகிறார். ஜாம்பி தீமில் உருவாகி வரும் இப்படம் குறித்து இயக்குநர் விஜய் வரதராஜன் Behindwoods தளத்திற்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

அவர் பேசுகையில், “அடல்ட் காமெடி திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. முன்பு இது பற்றிய விவாதங்கள் அதிகம் இருந்த நிலையில், தற்போது பொழுதுபோக்கு விஷயமாக அடல்ட் காமெடி திரைப்படங்கள் மாறியுள்ளன. இது போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பார்ப்புகளை கொண்டு நல்ல படைப்பை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது”.
“எனது முதல் படமே அடல்ட் காமெடி ஜானரில் வருவதில் மகிழ்ச்சி. இந்த படம் நன்றாக வந்திருக்கிறது. திரையில் அடல்ட் கண்டெண்ட் கொண்ட நல்ல காமெடியை ரசிகர்களுக்கு அளிக்க முடியும் என நம்புகிறேன். இந்த படம் ரிலீசானதும் ரசிகர்களுக்கு படம் பிடிக்கும் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
அட்டக்கத்தி தினேஷ், சஞ்சிதா ஷெட்டி நடிக்கும் இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்கிறார். இப்படத்தில் சில காட்சிகளுக்கு கட் சொல்லி வசனங்களை மியூட் செய்து, படத்திற்கு சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றன. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.