தளபதி விஜய் - விஜய் சேதுபதி இணைந்து தோன்றும் 'மாஸ்டர்' 3rd Look - எப்போ தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெறற்றன. அதன் பிறகு விஜய் சேதுபதியின் லுக் எப்பொழுது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வந்தது.

Thalapathy Vijay, Vijay Sethupathi's Master third Look to release in Jan 26

இந்நிலையில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து தோன்றும் 3வது லுக் போஸ்டர் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (26.01.2020) வெளியாகும் என்று அறிவிப்பு தற்போது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து முதன் முதலில் இணைந்து தோன்றும் காட்சிகள் சென்னை கிண்டியில் படமாக்கப்பட்டன.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில், மாளவிகா மோகனன்,  சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், பிரேம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Entertainment sub editor