''தல அஜித் ஃபேன் தான் ஆனாலும் தளபதி...'' - பிரபல ஹீரோ கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'சிக்சர்' படத்துக்கு பிறகு வைபவ் நடிப்பில் நாளை (24-01-2020) திரையரங்குகளில் வெளியாகவிருக்கிற படம் 'டாணா'. நோபல் மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்தை யுவராஜ் சுப்ரமணி இயக்கியுள்ளார்.

Thalapathy Vijay , Thala Ajith , Actor Vaibhav Speaks about his wish

இந்த படத்தில் வைபவிற்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடிக்க, யோகி பாபு, பாண்டியராஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க, சிவா ஜி.எம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த படம் குறித்து நடிகர் வைபவ் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அவரிடம், உங்களுக்கு யார் கூட நடிக்க விருப்பம் என்று தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், அஜித் சார் கூட திரும்ப நடிக்கணும். மங்காத்தா படத்துல அவர அவ்ளோ ரசிக்க முடியல , திரும்ப ஒரு படம் அவர் கூட நடிச்சு ரசிச்சுக்கிட்டே இருக்கணும்'' என்றார்.

அப்புறம் தளபதி கூட அண்ணா கூட நடிக்கணும் ஆசை. அத திட்டுவாங்க, நீ தல ஃபேன் எப்படிடானு, அது தெர்ல , ரெண்டு பேரும் ரெண்டு அண்ணா. தளபதியிந் டான்ஸை செட்ல போய் பார்க்கணும். ஒரு தடவை போனேன். வெளியவே மீட் பண்ணிட்டு வந்துட்டேன்'' என்றார்.

''தல அஜித் ஃபேன் தான் ஆனாலும் தளபதி...'' - பிரபல ஹீரோ கருத்து வீடியோ

Entertainment sub editor