மாஸ்டர் BREAKING: தளபதி விஜய் – விஜய் சேதுபதி Face To Face சீனின் மாஸ் அப்டேட்!
முகப்பு > சினிமா செய்திகள்தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் பொங்கலை முன்னிட்டு வெளியாகி செம வைரலானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன், பிரேம், கௌரி கிஷன், விஜய் டிவி புகழ் தீனா, மகேந்திரன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.இந்நிலையில் இந்த டெல்லி, ஷிமோகாவில் நிறைவடைந்த படப்பிடிப்பைத் தொடர்ந்து மாஸ்டர் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் விஜய், விஜய் சேதுபதியோடு நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.