தமிழ் சினிமாவில் கிராமம் சார்ந்த மக்களின் வாழ்வியலை திரையில் மண்வாசனை மாறாமல் காட்டி புது ட்ரெண்டை உருவாக்கியவர் இயக்குநர் பாரதிராஜா. 16 வயதினிலே, நிழல்கள், மண் வாசனை போன்ற ஏராளமான திரைப்படங்களை இயக்கிய அவர் 6 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

இயக்குநர் இமையம் என்று போற்றப்படும் இவர் 2013ம் ஆண்டு வெளியான 'அன்னக்கொடி' என்ற படத்தை இயக்கினார். அதுவரை திரைப்படங்களில் சிறு வேடங்களில் தொன்றி வந்த அவர் 'பாண்டிய நாடு', 'குரங்கு பொம்மை' போன்ற படங்கள் மூலம் நடிப்பிலும் முத்திரை பதித்தார்.
தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இவர் ’மீண்டும் ஒரு மரியாதை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் ஓம் என்று பெயரிடப்பட்டிருந்த இந்த படம் தற்போது ’மீண்டும் ஒரு மரியாதை’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பாரதிராஜாவுடன் ராசி நக்ஷத்ரா, மவுனிகா பாலு மகேந்திரா, ஜோ மல்லூரி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி திரைக்கு வருகிறது.