‘துருவங்கள் 16’, ‘நரகாசூரன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் நரேனின் ‘மாஃபியா’ படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி உள்ளது.
அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்க கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் மாஸான டீசர் ஏற்கெனவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி உலகெங்கும் ரிலீசாகிறது என்று தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் இன்று மாலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.
Tags : Mafia, Arun Vijay, Prasanna, Karthick Naren