Breaking: கிளைமேக்ஸை நோக்கி தளபதி விஜய்யின் மாஸ்டர் டீம்.... தியேட்டர்ல சும்மா சவுண்ட் கிழியபோது !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்' படம் ஏப்ரல் மாதம் வெளியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில் நேற்று வெளியான 'அவன் கண்ணப் பார்த்தாக்கா' லிரிக்கல் வீடியோ ஏப்ரல் வெளியீடை உறுதி செய்துள்ளது.

தளபதி விஜய் , விஜய் சேதுபதியின் மாஸ்டர் படத்தில் இருந்து செம சவுண்டான அப்டேட் | Thalapathy Vijay, Vijay Sethupathi, Lo

இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்டப்பணிகள் பரபரப்பாக நடைபெற்றுவருவதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி இந்த படத்தின் DI பணிகள் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனின் மேற்பார்வையிலும், இறுதிக்கட்ட ஒலிப்பதிவு பணிகளும் நடைபெற்றுவருகிறதாம். இறுதிகட்டப் பணிகள் அனைத்தும் விரைவில் நிறைவுபெறவிருக்கிறது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் பிரபலங்கள் படம் குறித்து பேசியது படத்தின் மீதான எதிர்பார்ப்பை தீவிரப்படுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். அனிருத் இசையில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

Entertainment sub editor