தளபதி விஜய்யின் மாஸ்டர் பாட்டு பீட்டு வெளியானது - தளபதி டான்ஸ் பட்டய கிளப்பப்போது..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மாஸ்டர்' படத்தில் தளபதி விஜய் பாடிய ஒரு குட்டிக் கத பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. கத்தி படத்தில் இடம் பெற்ற செல்ஃபி புள்ள பாடலுக்கு பிறகு விஜய் - அனிருத் கூட்டணியில் இந்த பாடல் வெளியாகவுள்ளதால் இந்த பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Thalapathy Vijay, Anirudh, Lokesh Kanagaraj's Master Oru kutty Katha Song Beat is out

இந்நிலையில் ரசிகர்களை குஷிபடுத்தும் விதமாக பாடலின் பீட் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அஜித் தற்போது இந்த பாடலின் பீட்டை வாசித்து காட்டுகிறார். அதனை கேட்கும் போது செம டான்ஸ் நம்பராக இந்த பாடல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறுகிறது.

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் பணிகள் நெய்வேலியில் நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

Entertainment sub editor