தர்பார் ரிலீஸ்... சூப்பர் ஸ்டாரின் 'தலைவர் 168' டீம் சென்னை விரைவு...
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 08, 2020 02:35 PM
ரஜினிகாந்த்-ஏ.ஆர்.முருகதாசின் கூட்டணியில் உருவாகி உள்ள தர்பார் திரைப்படம் வரும் ஜனவரி 9ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதில் அவருடன் நயன்தாரா, யோகிபாபு, சுனில் ஷெட்டி என்று ஏராளமானோர் நடிக்கின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தர்பார் ரிலீசுக்கு முன்பாகவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'தலைவர் 168' திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் அவருடன் கீர்த்தி சுரேஷ், சூரி, மீனா, குஷ்பு, சதீஷ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.
டி.இமானின் இசையில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. தற்போது எங்களுக்கு கிடைத்துள்ள தகவலின்படி ‘தலைவர் 168’ன் முதல் ஷெட்யூல் முடிவடைந்து படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர்.