விஜய்யின் ’மாஸ்டர்’ - ரிலீஸ் எப்போது தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 06, 2020 06:29 PM
விஜய், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். எக்ஸ்பி நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்த படத்தில் விஜயுடன் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா, மாஸ்டர் மகேந்திரன், அர்ஜுன் தாஸ் என்று ஏராளமானோர் நடிக்கின்றனர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்துக்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இந்த படத்தில் விஜய் சேதுபதியின் லுக்கை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், விக்ரமின் ‘கோப்ரா’ திரைப்படத்தை தயாரித்துவரும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் மாஸ்டர் படத்தின் சர்வதேச வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது. மாஸ்டர் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
We are extremely delighted to present #Master. #April2020 pic.twitter.com/owMJDUYC4r
— Seven Screen Studio (@7screenstudio) January 6, 2020