சென்னை திரும்பிய தளபதி விஜய்..!- அடுத்த Move என்ன?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 30, 2019 06:17 PM
‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து வெளிநாடு சென்ற நடிகர் விஜய் மீண்டும் சென்னை திரும்பினார்.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் அட்லி இயக்கியுள்ள ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த செப்.19ம் தேதி தாம்பரத்தில் உள்ள சாய் ராம் கல்லூரியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் சிறிய இடைவெளிக்காக கனடா நாட்டிற்கு கடந்த செப்.20ம் தேதி புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்த விஜய்யின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இதையடுத்து, வெளிநாடு பயணத்தை முடித்துவிட்டு இன்று (செப்.30) காலை மீண்டும் சென்னை திரும்பினார். இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகளில் வரும் அக்.3ம் தேதி முதல் கலந்துக் கொள்ளவிருக்கிறார். சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், எடிட்டர் பிலோமின்ராஜ், இசையமைப்பாளர் அனிருத், ஆகியோர் இப்படத்தில் பணிபுரிகின்றனர்.
விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இப்படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.