Its Official: நடிகர் விஜய்யின் ‘தளபதி 64’-ல் இணைந்த மக்கள் செல்வன்
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 30, 2019 05:13 PM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்து வரும் படம் 'பிகில்'. பெண்கள் ஃபுட்பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இந்த படத்தை அட்லி இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் வெறித்தனம் பாடலின் புரோமோ வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் தீபாளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.
இதனையடுத்து மாநகரம், கைதி படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் ஒரு படத்தில் நடித்துவருகிறார். விஜய்யின் 64 வது படமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தளபதி 64 படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3 ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது.
We are overwhelmed and excited to have our versatile star, '#MakkalSelvan’ @VijaySethuOffl sir on board for #Thalapathy64 🔥 #VJSjoinsThalapathy64 #Summer2020@actorvijay @Dir_Lokesh @anirudhofficial @SonyMusicSouth pic.twitter.com/JyFFosIVbj
— XB Film Creators (@XBFilmCreators) September 30, 2019