அடுத்த 3 நாட்களுக்கு படு ஜோர் தான்..! - தளபதி 64 அறிவிப்புகள் On the Way..!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 30, 2019 04:12 PM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்து வரும் படம் 'பிகில்'. பெண்கள் ஃபுட்பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இந்த படத்தை அட்லி இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் வெறித்தனம் பாடலின் புரோமோ வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் தீபாளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.
இதனையடுத்து மாநகரம், கைதி படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் ஒரு படத்தில் நடித்துவருகிறார். விஜய்யின் 64 வது படமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்
இந்நிலையில், தொடர்ந்து மூன்று நாட்கள் இப்படத்தை பற்றிய அறிப்பை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அதாவது 30, 1, 2 ஆகிய தேதிகளில் தினமும் 5 மணிக்கு படத்தை பற்றிய அப்டேட்டை வெளியிட இருக்கிறார்கள். இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Get ready for major announcements from Team #Thalapathy64 for the next 3 Days. Every evening at 5 PM starting from Today!
— XB Film Creators (@XBFilmCreators) September 30, 2019