''அப்போ தல அஜித்தை பார்த்தா சிங்கம் பார்த்த மாதிரி இருக்கும்'' - பிரபல சண்டை பயிற்சி இயக்குநர்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 30, 2019 06:00 PM
தல அஜித் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற படம் 'நேர்கொண்ட பார்வை'. வினோத் இயக்கிய இந்த படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் தல அஜித்துடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து சண்டைபயிற்சி இயக்குநர் திலீப் சுப்ராயன் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அதில், அஜித் சார் மாஸ். 'விஸ்வாசம்', 'நேர்கொண்ட பார்வை' என ஒவ்வொரு படங்களும் வேறு வேறு விதமாக இருக்கும்.
அவருக்குனு இருக்குற பாடி லாங்குவேஜ், பஞ்ச் எல்லாமே பிடிக்கும். அவர் நடந்து வரது ரொம்ப பிடிக்கும். நேர்கொண்ட பார்வையில் ராடை இழுத்துட்டு வந்து நாலஞ்சு பேர அடிச்சிட்டு வருவாரு. அது பயங்கரமா இருக்கும். அவர் திரும்பி பார்த்தா சிங்கம் மாதிரி இருக்கும்'' என்றார்.
''அப்போ தல அஜித்தை பார்த்தா சிங்கம் பார்த்த மாதிரி இருக்கும்'' - பிரபல சண்டை பயிற்சி இயக்குநர் வீடியோ