“அப்பா என்னிடம் கேட்டது...”- பிக் பாஸ் வீட்டில் தன்னை அதிர வைத்த நிகழ்வு குறித்து லாஸ்லியா
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 30, 2019 03:14 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்கியுள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கான டாஸ்குகள் விறுவிறுப்பாக செல்கின்றன.

தர்ஷன் வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டவுடன் மற்ற போட்டியாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். எனக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது என்றும் ஆனால் இது மக்களின் முடிவை கமலும் தன் கருத்தை தெரிவித்தார்.
இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சிகான புரொமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன. முதல் புரொமோவில், பிக் பாஸ் 3-ல் இருந்து ஏற்கனவே வெளியேறிய மீரா மிதுன், ரேஷ்மா, மோகன் வைத்தியா, ஃபாத்திமா பாபு உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் எண்ட்ரி கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது புரொமோவில், ரேஷ்மா முகென் குறித்தும், அவர் அன்பிற்காக ஏங்குவது குறித்தும் பேசினார். அப்போது, “இந்த ஜென்மத்துல நீ அனாதை கிடையாது. அன்பு இல்லாத உலகமே கிடையாது. நீ வெளியில வந்தா தெரியும் உனக்கு எவ்ளோ அன்பு இருக்குனு. நீ நீயாவே இரு” என கூறினார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் எல்லோர் முன்பும் பேசிய லாஸ்லியா இந்த வீட்டிற்கு வரும்போது யாருடனும் அதிகமாக கனெக்ட் ஆகிவிடக்கூடாது, அழக்கூடாது என இருந்தேன்.
அதே வேளையில் என் அப்பா வந்ததது, அவர் என்னிடம் முதலில் கேட்ட கேள்வி என் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என கூறியுள்ளார்.
“அப்பா என்னிடம் கேட்டது...”- பிக் பாஸ் வீட்டில் தன்னை அதிர வைத்த நிகழ்வு குறித்து லாஸ்லியா வீடியோ