உலக அளவில் இந்த சாதனையை படைத்த பிகிலில் தளபதி விஜய்யின் 'வெறித்தனம்'
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 02, 2019 12:09 PM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்து அட்லி இயக்கியுள்ள படம் 'பிகில்'. இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

பெண்கள் ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் தளபதி விஜய் அப்பா - மகன் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், இந்துஜா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் இருந்து 'சிங்கப்பெண்ணே' என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி அதிரி புதிரி ஹிட் அடித்தது. இதனையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தளபதி விஜய் முதன்முறையாக பாடிய வெறித்தனம் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
விவேக் எழுதிய இந்த பாடல் வெளியாகி சில மணி நேரங்களிலேயே மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. இந்நிலையில் இந்த பாடல் உலக அளவில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் 5 ஆம் இடத்தை பிடித்துள்ளது.