அக்டோபரில் டபுள் ட்ரீட் கொடுக்க உள்ள விஜய் சேதுபதி!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Sep 01, 2019 06:56 PM
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
![Vijay Sethupathi Maamanithan slated for an October release Vijay Sethupathi Maamanithan slated for an October release](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/vijay-sethupathi-maamanithan-slated-for-an-october-release-photos-pictures-stills.jpg)
சீனுராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து மாமனிதன் படம் உருவாகியுள்ளது.
இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் விஜய் சந்தர் இயக்கிய சங்கத்தமிழன் படமும் அக்டோபர் மாதம் 4ம் தேதி வெளியாகும் என நாம் முன்பே அறிவித்திருந்தோம் இப்போது மாமனிதன் படமும் வெளியாவதால் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமையவுள்ளது.
மாமனிதன் படத்திற்காக முதன் முதலாக இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா சேர்ந்து இசையமைக்கின்றனர். இந்த படத்தை யுவனே தயாரித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.