பிரபல ஹீரோவை இயக்கவிருப்பதாக பிக்பாஸில் அதிரடியாக அறிவித்த சேரன் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம்(செப்டம்பர் 1) கமல்ஹாசன் போட்டியாளர்களிடையே உரையாடினார். கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்றாலும் அது போட்டியாளர்களுக்கு தெரியாது என்பதால் அவர்களை டென்ஷன்படுத்தி வேடிக்கை பார்த்தார்.

Cheran's next film with Vijay Sethupathi starts from January,2020

அப்போது போட்டியாளர்களிடம் பார்வையாளர்கள் சில கேள்விகளை கேட்டனர். சேரனிடம் ரசிகர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு உங்களது திட்டம் என்ன ? என்பது போல கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த  அவர், விஜய் சேதுபதியை வைத்து ஒருபடம் இயக்கவிருக்கிறேன். அந்த படம் அடுத்த வருடம் ஜனவரியில் தொடங்கும் என்று கூறினார். பின்னர் 'சேதுபதியை வைத்து நீங்கள் இயக்கும் படம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்' என்று கமல்ஹாசன் சேரனிடம் தெரிவித்தார்.