'விஜய்க்கு இணையா உச்ச நட்சத்திரமா வரவேண்டியவரு சிம்பு. ஆனா...' - சீமான் கருத்து
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 30, 2019 10:42 PM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்து வரும் படம் பிகில். அட்லி இயக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் தீபவாளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் சமீபத்தில் நிகழ்வு ஒன்றில் பேசிய சீமான் சிம்பு குறித்து கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், 'சிம்பு வந்து தம்பி விஜய் மாதிரி அசாத்திய திறமை உள்ள கலைஞன். தம்பி சிம்பு, பன்முகக் கலைஞன், பாடுவாரு, ஆடுவாரு, நடிப்பாரு, கதை எழுதுவாரு, இசையமைப்பாரு, படம் இயக்குவாரு. தம்பி விஜய்க்கு இணையாக உச்ச நட்சத்திரமா வரவேண்டியவரு சிம்பு.
ஆனால் அவர் நேரம் தவறாம பங்கேற்பது இல்லை. இப்போ வரைக்கும் அத சொல்லிட்டு தான் இருக்குது. முறையா போகணும்னு. அதுகக்கு அவர், செல்லமா வளர்ந்துட்டேன் என்று சொல்றார். சிவாஜி மகன விட செல்லமா வளர்ந்துட்டியா என்று கேட்டேன். அவர் இருக்க பிரச்சனைகள் எல்லாம் சரி செய்யப்படும். நாங்க கூட இருந்து சரி செய்து கொடுப்போம்'' என்றார்.
'விஜய்க்கு இணையா உச்ச நட்சத்திரமா வரவேண்டியவரு சிம்பு. ஆனா...' - சீமான் கருத்து வீடியோ