பிரபல இயக்குநருடன் சந்தானம் இணையும் படத்தின் ஷூட்டிங் பற்றிய தகவல்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 02, 2019 11:35 AM
'ஜெயம் கொண்டான்', 'கண்டேன் காதலை' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆர்.கண்ணன். இவர் இயக்கத்தில் அதர்வா - மேகா ஆகாஷ் உள்ளட்டோர் நடித்து பூமராங் என்ற படம் வெளியாகியிருந்தது.

இதனையடுத்து அவர் சந்தானத்தை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனமும், எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன் நிறுவனமும் தயாரிக்கின்றன.
இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று (செப்டம்பர் 1) தொடங்கியுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்துக்கு ஸ்டண்ட் சில்வா சண்டை பயிற்சி பணிகளை மேற்கொள்ளவிருக்கிறார். இந்த படத்துக்கு வித்தைக்காரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.