நன்றி கடன் தீர்ப்பதற்கு... - பிகில் டீமிற்கு தங்கத் தளபதி விஜய் செய்த காரியம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 13, 2019 07:11 PM
'தெறி', 'மெர்சல்' படங்களுக்கு பிறகு அட்லி - தளபதி விஜய் கூட்டணி இணைந்திருக்கும் படம் 'பிகில்'. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, இந்துஜா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் இருந்து சிங்கப் பெண்ணே என்ற பாடல் வெளியாகி அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளது. இந்த பாடலில் விஜய்யுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து தோன்றவுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறுவதாகவும், நடிகர் விஜய் சம்மந்தபட்ட காட்சிகள் இன்றுடன் முடிவடைவதாகவும் ஏற்கனவே நமக்கு தகவல் கிடைத்திருந்தன.
இந்நிலையில் நடிகர் விஜய்க்கு பிகில் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைவதை முன்னிட்டு படக்குழுவினர் 300க்கும் மேற்பட்டோருக்கு விஜய் தங்க மோதிரம் வழங்கவுள்ளதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.