‘போக்கிரி’ இயக்குநருடன் இணைந்த ‘அர்ஜுன் ரெட்டி’ ஹீரோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா தனது அடுத்த படத்திற்காக பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநருடன் கைக்கோர்த்துள்ளார்.

Vijay Deverakonda's next with pokkiri director Puri Jagannadh

சமீபத்தில் பரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்திருந்த ‘டியர் காம்ரேட்’ திரைப்படம் தமிழ் உட்பட 4 தென்னிந்திய மொழிகளில் வெளியானது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரியும், நடிப்பும் பாராட்டுக்களை குவித்தது.

இதையடுத்து விஜய் தேவரகொண்டா நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் பூரி ஜகன்னாத் இயக்குகிறார். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ‘போக்கிரி’, கடந்த 2015ம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆர் நடித்த டெம்பர் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். ‘டெம்பர்’ திரைப்படம் சமீபத்தில் விஷால் நடிப்பில் ‘அயோக்யா’ என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விஜய் தேவரகொண்டா நடிக்கவிருக்கும் திரைப்படத்தை பூரி கனெக்ட்ஸ் மற்றும் பூரி ஜகன்னாத் டூரிங் டாக்கீஸ் என்ற தனது சொந்த தயாரிப்பின் பேனரில் இப்படத்தை பூரி ஜகன்னாத், நடிகை சார்மி கவுருடன் இணைந்து தயாரிக்கிறார். இது குறித்த அறிவிப்பை நடிகை சார்மி கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.