“உங்களுக்கு வேணும்னா நீங்க Marriage பண்ணிக்கோங்க..” - வரலக்ஷ்மி அதிரடி!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 13, 2019 06:18 PM
எஸ்.முத்துக்குமாரன் இயக்கத்தில் விமல் மற்றும் வரலக்ஷ்மி ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘கன்னி ராசி’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை வரலக்ஷ்மி, நிஜ வாழ்க்கையில் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார்.
கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராஹிம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ்.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று (ஆக.14) நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் பகிர்ந்துக் கொண்டு ‘கன்னி ராசி’ திரைப்படம் குறித்து பகிர்ந்துக் கொண்டனர்.
அப்போது பேசிய நடிகை வரலக்ஷ்மி, ‘பொதுவாகவே புது இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். ஸ்கிரிப்ட் படிக்கும் போதே விழுந்து விழுந்து சிரித்தேன். இந்த டீம் செம்ம எனர்ஜியாக இருந்தது. படமும் அதே எனர்ஜியாக இருக்கும். இந்த படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்'.
'நான் இவ்வளவு நடிகர்களுடன் சேர்ந்து நடித்தது இல்லை. பாண்டியராஜன் சார், யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து ஜாலியாக நடித்தேன். விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. இப்படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் ஒரு ஜாலியான படம்’ என்றார்.
“உங்களுக்கு வேணும்னா நீங்க MARRIAGE பண்ணிக்கோங்க..” - வரலக்ஷ்மி அதிரடி! வீடியோ