BIG BREAKING : தளபதி ரசிகர்களே!!! "பிகிலு" சத்தம் சும்மா காத கிழிக்கணும் - டீசர் அப்டேட் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Sep 04, 2019 03:19 PM
இயக்குநர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் 'பிகில்'. பெண்கள் ஃபுட் பால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் முதன் முறையாக தளபதி விஜய் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெறித்தனம் என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் சில தினங்களுக்கு முன் வெளியாகி சமூக வலைதளங்களில் செம வைரலானது. இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். தற்போது எங்களுக்கு கிடைத்த ஸ்பெஷல் தகவல், இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற உள்ளது . இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BIG BREAKING : தளபதி ரசிகர்களே!!! "பிகிலு" சத்தம் சும்மா காத கிழிக்கணும் - டீசர் அப்டேட் இதோ! வீடியோ