'தமிழ்நாட்டில் ஒரு பருப்பும் வேகாது': விஜய் - ஸ்டாலின் சந்திப்பு குறித்து அமைச்சர் கருத்து
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 05, 2019 11:27 AM
மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் மகள் செல்வி மற்றும் முரசொலி செல்வம் தம்பதியினரின் பேத்தி ஓவியாவிற்கும் அக்னீஸ்வரன் என்பவருக்கும் செப்டம்பர் 1 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் விஜய் கலந்துகொண்டார். அங்கிருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளர் துரைமுருகன் ஆகியோருடன் விஜய் உரையாடினார். மு.க.ஸ்டாலின் மற்றும் விஜய் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் நிகழ்வு ஒன்றில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மு.க.ஸ்டாலின் - விஜய் சந்திப்பு குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ''இரண்டு பேரும் சந்தித்தால் எங்களுக்கு என்ன வந்தது. அதனால தாராளமாக பேசட்டும். பலமாக இருப்பவர்கள் பலவீனமானவர்கள் பற்றி கவலைப்படத் தேவையில்லை. நீச்சல் தெரிந்தவர்கள் ஆழத்தை பற்றி கவலைப்படத்தேவையில்லை.
திமுகவில் தற்போது சரிவு ஏற்பட்டுவிட்டது. அந்த சரிவை சரிசெய்து ஆட்சியை பிடிக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் நடிகர் விஜய்யை சந்தித்திருக்கலாம். நீங்கள் நடிகர் விஜய்யை சந்தித்தாலும் சரி, ரஷ்யா அதிபரை சந்தித்தாலும் சரி, தமிழ்நாட்டில் ஒரு பருப்பும் வேகாது'' என்றார்.