Throwback: ''அப்போ அந்த படம் தான் பெரிய ஹிட்'' - தளபதி விஜய்யின் படம் குறித்து பிரபல ஹீரோ கருத்து
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 04, 2019 01:37 PM
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்து வெளியான படம் 'மான்ஸ்டர்'. பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, தங்கபிரபாகரன், கோபிநாத் உள்ளிட்டோர் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.

எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது. எலியால் பாதிக்கப்பட்ட வீட்டு ஓனராக எஸ்.ஜே.சூர்யா படும் அவதிகள் தான் படத்தின் கதை. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு விமர்சகர்களால் பாரட்டப்பட்டது.
இந்நிலையில் இந்த படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா அப்போது Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நியூ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு புகைப்படம் காட்டப்பட்டது. அதில், ஏ.ஆர்.ரஹ்மானின் தாய் இசையை வெளியிட, எஸ்.ஜே.சூர்யாவின் தாய் அதனை பெற்றிருந்தார். உடன் தளபதி விஜய் இருந்தார்.
இந்த நிகழ்வு குறித்து பேசிய எஸ்.ஜே.சூர்யா, தளபதி விஜய் அப்போ இளைய தளபதியா இசையை பெற்றுக்கொண்டார். வாழ்வில் மறக்கமுடியாத தருணம். பின்னர் அவரிடம் விஜய், அட்லி, ஏ.ஆர்.ரஹ்மானுடன் அவர் இருக்கும் புகைப்படம் காட்டப்பட்டது. மெர்சல் சக்ஸஸ் பார்ட்டில எடுத்த ஃபோட்டோ அது.. மெர்சலுக்கு சக்ஸஸ் பார்ட்டி பண்ணாம எதுக்கு பண்றது. சரியான ஹிட்டு. அந்த படம் ரிலீஸான வரைக்கும் அது தான் பெரிய ஹிட்'' என்றார்.
THROWBACK: ''அப்போ அந்த படம் தான் பெரிய ஹிட்'' - தளபதி விஜய்யின் படம் குறித்து பிரபல ஹீரோ கருத்து வீடியோ