தளபதி விஜய்யின் "பிகில்" படத்தில் இருந்து வெளியான புது ஸ்டில் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 24, 2019 09:59 AM
தளபதி விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிற படம் 'பிகில்'. அட்லி இயக்கும் இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், இந்துஜா, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்நிலையில் பிகில் படத்தின் அசத்தலான Poster ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இது தளபதி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது மற்றும் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
#BigilPosters! pic.twitter.com/GGmj50dFxU
— AGS Entertainment (@Ags_production) October 23, 2019
Tags : Vijay, Nayanthara, Atlee, Ags