'செஞ்சிட்டா போச்சு!' - பிகில் எமோஜியை வெளியிட்ட தளபதி விஜய்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 23, 2019 01:20 PM
தளபதி விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிற படம் 'பிகில்'. அட்லி இயக்கும் இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் எமோஜி எனப்படும் ஸ்டிக்கர் வெளியாகியுள்ளது. இதனை தளபதி விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை ரசிகர்கள் பகிர்ந்து ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
— Vijay (@actorvijay) October 23, 2019
Tags : Bigil, Vijay, Nayanthara, Atlee, Bigil Emoji