ரியல் வெறித்தனம்! - தளபதி விஜய்யின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்லை பகிர்ந்த பிகில் பிரபலம்
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 23, 2019 01:54 PM
தளபதி விஜய் நடித்து வருகிற அக்டோபர் 25 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கும் படம் 'பிகில்'. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார்.
![GK Vishnu New Profile Picture With Thalapthy Vijay At Bigil GK Vishnu New Profile Picture With Thalapthy Vijay At Bigil](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/gk-vishnu-new-profile-picture-with-thalapthy-vijay-at-bigil-news-1.png)
இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், இந்துஜா, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒளிப்பதிவாளர் விஷ்ணு வெளியிட்டுள்ளார். டிவிட்டரில் இது பலரையும் கவர்ந்துள்ளது. ரசிகர்கள் இதை அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.
#NewProfilePic pic.twitter.com/ggwz3vLIJh
— GK Vishnu (@dop_gkvishnu) October 23, 2019