www.garudabazaar.com

யோகி பாபுவுக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்த விஜய்.. ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக தற்போது வலம் வருபவர் யோகிபாபு. ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

Actor Vijay Gifts cricket bat to yogi babu pic viral

இந்த ஆண்டிலும் பீஸ்ட், நானே வருவேன், யானை, லவ் டுடே, காஃபி வித் காதல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் யோகி பாபு நடித்திருந்தார்.

இதற்கு அடுத்தபடியாக, வாரிசு, ஜெயிலர் உள்ளிட்ட எக்கச்சக்க திரைப்படங்களிலும் யோகி பாபு நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதில், விஜய்யுடன் இணைந்து யோகி பாபு நடித்துள்ள வாரிசு திரைப்படம், 20-23 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி அதிகம் ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறது.

இந்த நிலையில், நடிகர் யோகி பாபு தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கிரிக்கெட் பேட்டுடன் இருக்கும் புகைப்படம், ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. சிறந்த காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வரும் யோகி பாபு, ஷூட்டிங் ஸ்பாட் அல்லது வேறு இடங்களில் கிரிக்கெட் ஆடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளவர்.

அடிக்கடி பல இடங்களில், சிக்ஸர்கள், ஃபோர்கள் என யோகி பாபு அடிக்கும் கிரிக்கெட் ஷாட்கள் தொடர்பான வீடியோக்கள் அதிகம் லைக்குகளை அள்ளும். அப்படி ஒரு சூழலில், தற்போது ஹெல்மெட் மற்றும் கிரிக்கெட் பேட் வைத்துக் கொண்டு தான் இருக்கும் புகைப்படம் ஒன்றை யோகி பாபு பகிர்ந்துள்ளார். அதன் கேப்ஷனில், "இந்த பேட்டை எனக்கு சர்ப்ரைஸா கொடுத்த விஜய் அண்ணாக்கு தேங்க் யூ" என குறிப்பிட்டு, #thalapathyvijayyogibabu என்ற ஹேஷ் டேக்கையும் இணைத்துள்ளார்.

நடிகர் விஜய்யுடன் இணைந்து சர்க்கார், மெர்சல், பிகில், பீஸ்ட் மற்றும் அடுத்து வெளியாக உள்ள வாரிசு வரை நிறைய படங்கள் நடித்துள்ள யோகி பாபுவுக்கு கிரிக்கெட் பேட்டை நடிகர் விஜய் பரிசளித்துள்ள விஷயம், பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vijay Gifts cricket bat to yogi babu pic viral

People looking for online information on Cricket Bat, Gift, Varisu, Vijay, Yogi Babu will find this news story useful.