www.garudabazaar.com

உங்க life-ல ஹாரர் அனுபவம் இருக்கா.?.. 'கனெக்ட்' படத்தை நயன்தாராவுடன் பார்க்கலாம்.. இத செஞ்சா போதும்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டில் வெளியான 'மாயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன். 'மாயா' நயன்தாராவின் 50வது படமாகும், மேலும் இது தமிழ் சினிமாவின் சிறந்த திகில் படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய மாயா திரைப்படத்தை S R பிரபு தயாரித்து இருந்தார்.

Nayanthara next Connect movie contest to fans by Behindwoods

அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு டாப்சி நடிப்பில் கேம் ஓவர் படத்தை இயக்கினார் அஸ்வின் சரவணன். இந்தப் படத்தில், மர்மமான ஊடுருவல்காரர்களிடமிருந்து தனது வீட்டைப் பாதுகாக்கும் PTSD உடைய பெண்ணாக டாப்ஸி நடித்திருப்பார். அஸ்வின் சரவணன் இயக்கிய இந்த சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தை Y NOT ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்தது.

இதனைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் நயன்தாராவுடன் இணைந்துள்ள இயக்குனர் அஸ்வின் சரவணன், 'கனெக்ட்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாராவுடன் சத்யராஜ், அனுபம் கெர், வினய் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார்.

கனெக்ட் திரைப்படம், 22.12.2022 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில், ஹாரர் வகைமையில் உள்ளதால் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படம் 99 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைவேளை இல்லாத தமிழ்த் திரைப்படமாக இந்த படம் வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மாயா, கேம் ஓவர் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் அதிக கவனம் ஈர்த்த இயக்குனர் அஸ்வின் சரவணனின் கனெக்ட் திரைப்படத்தையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், கனெக்ட் படத்தின் ரிலீஸை முன்னிட்டு அசத்தலான Contest ஒன்றை Behindwoods சேனல் பிரத்யேகமாக அறிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடந்த ஹாரர் அனுபவங்கள் குறித்த செல்ஃபி வீடியோவை +91 90030 19000 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

இதில் வெற்றி பெறும் நபர்களுக்கு நடிகை நயன்தாரா மற்றும் கனெக்ட் படத்தின் படக் குழுவினர்களுடன் சேர்ந்து சிறப்புக் காட்சி மூலம் படம் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara next Connect movie contest to fans by Behindwoods

People looking for online information on Ashwin Saravanan, Connect, Contest, Nayanthara will find this news story useful.