www.garudabazaar.com

வாரிசு 'தீ தளபதி' பாடல்.. பாடி அசத்திய பாடகர் திருமூர்த்தி! அசரவைக்கும் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தற்போது விஜய் நடிப்பில் 'வாரிசு' படம் உருவாகி வருகிறது.

Singer Thirumoorthy Sing Varisu Thee Thalapathy Song

Also Read | துணிவு பட பணியில் மீண்டும் BIGG BOSS மமதி.. அவரே வெளியிட்ட ஃபோட்டோஸ்!

இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகின. இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Singer Thirumoorthy Sing Varisu Thee Thalapathy Song

ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆக உள்ளனர். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.

இந்த வாரிசு படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

சில நாட்களுக்கு முன் வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியானது.

Singer Thirumoorthy Sing Varisu Thee Thalapathy Song

தீ தளபதி என்ற இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். நடிகர் சிம்பு இந்த பாடலை பாடியுள்ளார். .

இந்நிலையில் பிரபல பாடகர் திருமூர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீ தளபதி பாடலை பாடி இசைத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். "எகிறி எழுவான் என்னை எதிர்க்கவே.. பழைய எதிரிகள் என் ரசிகர் படையிலே.. போன்ற வரிகளை திருமூர்த்தி பாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

பாடகர் திருமூர்த்தி ஏற்கனவே அண்ணாத்த படத்தில் பாடியுள்ளார்.

Also Read | திருமணம் ஆன பாக்கியலட்சுமி நடிகை ரித்திகா .. மாலத்தீவில் கணவருடன் டூர்.. வெளியான PHOTOS!

தொடர்புடைய இணைப்புகள்

Singer Thirumoorthy Sing Varisu Thee Thalapathy Song

People looking for online information on Thirumoorthy, Thirumoorthy Sing Varisu song, Varisu, Varisu song, Varisu Thee song will find this news story useful.