மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து உருவாகியிருக்கும் படம் 'சைக்கோ'. டபுள் மீனிங் புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
உதயநிதியுடன் அதிதி ராவ், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படம் வரும் ஜனவரி 24ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இயக்குநர் மிஷ்கின் Behindwoods TVக்கு பேட்டியளித்தார்.
சைக்கோ படத்துக்காக இளையராஜாவுடன் பணியாற்றிய சுவாரசியமான தருணங்களை பகிர்ந்துகொண்ட அவர், தனது ’சைக்கோ’ படத்தை 1960ம் ஆண்டு அதே பெயரில் வெளியான ஹாலிவுட் படம் ஒன்றை இயக்கிய திரைத்துறை மேதை ஹிட்ச்காக்கிற்கு (Hitchcock) சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.
பரந்துபட்ட தன் வாசிப்பு, மற்றும் திரைத்துறைக்கு வரும் முன் செய்த வேலைகள் குறித்து பகிர்ந்த அவர், தான் இணை இயக்குனராக இருந்தபோது விஜயின் ’யூத்’ படத்தில் இடம்பெற்ற ’ஆல் தோட்டா பூபதி’ பாடலுக்கு வாலி எழுதிய வரிகளுக்கு பதில் கபிலன் எழுதிய வரிகளை மாற்றி பதிவு செய்த ’த்ரில்’ அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
தளபதி விஜய் படத்துக்காக மிஷ்கின் முதல் முறை செய்த 'FRAUD வேலை’ கதை! வீடியோ