தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தில் இருந்து வெளியான ஆண்ட்ரியாவின் புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் பொங்கலை முன்னிட்டு வெளியாகி செம வைரலானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

Master Thalapathy Vijay Andrea new look Lokesh Kanagaraj, Vijay Sethupathi

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன், பிரேம், கௌரி கிஷன், விஜய் டிவி புகழ் தீனா, மகேந்திரன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா தன் இன்ஸ்டா பக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் 3 புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதற்கு கேப்ஷன் கொடுத்துள்ள இவர், இந்த ஆண்டின் மிகப்பெரிய திரைப்படத்தில் நடிப்பது அற்புதமான அனுபவம் என்றும், தற்போது பிப்ரவரியில் நடபெறும் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

Entertainment sub editor